தினமணி 03.08.2010
மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தல்
மதுரை, ஆக. 2: மதுரை மாநகராட்சியில் நிலைக்குழு உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சி மாமன்ற நிலைக் குழுக்களான கணக்குக் குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழுக்களுக்கான உறுப்பினர் தேர்தல் மாமன்றக் கூட்டத்தில் நடைபெற்றது.
இதில், கணக்குக் குழு உறுப்பினர் பதவிக்கு 29-வது வார்டு கவுன்சிலர் எம்.ஏ. தம்பிதுரை, நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர் பதவிக்கு 53-வது வார்டு கவுன்சிலர் ஜி.காதர் அம்மாள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் அறிவித்தார்.