தினமலர் 04.032010
மாநகராட்சி பள்ளிகளிலும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை: மேயர் தகவல்
சென்னை : “”தனியார் பள்ளிகளைப் போல் மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் முன் கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங் கும்” என மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மாணவ, மாணவியர் களுக்கு, இலவச புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி சர்மா நகர் மாநகராட்சி பள்ளியில் நடந்தது.மேயர் சுப்ரமணியன் பங்கேற்று புத்தகப் பைகளை வழங்கி பேசியதாவது:கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 730 மாணவ, மாணவியர் களுக்கு, ஒரு கோடியே நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் தரமான புத்தகப் பைகள் வழங்கப்படுகிறது.மாநகராட்சி பள்ளிகளில் படிக் கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இலவச ஷூக்கள் வழங்கப்பட் டன. நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அகராதியும், இரண்டு கோடியே 19 லட்ச ரூபாய் செலவில் சீருடைகளும் வழங்கப்பட்டன.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மேற் படிப்பை தொடர உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.பள்ளிகளை நல்ல முறையில் நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் ஊக்குவிக்கும் ஆசிரியர் களும் கவுரவிக்கப்படுகின்றனர்.தனியார் பள்ளிகளை போல, மாநகராட்சி பள்ளிகளிலும் முன் கூட்டியே தொடக்கக் கல்வி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.ஏப்ரல் மாதம் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்கும். மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் களின் சேர்க்கையை அதிகப்படுத் தும் வகையில், மாநகராட்சி பள்ளிகளில் கல்வி வளர்ச்சி குறித்து, விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட உள்ளன. வட சென்னை, தென் சென்னை இரண்டு இடங்களிலும் இந்த விழிப்புணர்வு முகாம்கள் ந டத்தப்படும்.இவ்வாறு மேயர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன், துணை கமிஷனர்(கல்வி)பாலாஜி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மற்றும் கவுன்சிலர் கள் பங்கேற்றனர்.