தினகரன் 29.06.2010
மாநகராட்சி பள்ளிகளில் துணைமேயர் சோதனை
பெங்களூர், ஜூன் 29: பெங்களூர் மாநகராட்சி கீழ் இயங்கி வரும் பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் துணை மேயர் என்.தயானந்தா நேற்று திடீர் சோதனை நடத்தினார்.
மாநகரின் கோவிந்தராஜ்நகர், மூடலபாளையா வார்டுகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் துணை மேயர், வார்டு கவுன்சிலர்களுடன் சென்று சோதனை நடத்தினார். முதலில் பள்ளிகளுக்கு சென்ற துணைமேயர், நடப்பு கல்வியாண்டில் தரமான கல்வி வழங்கி மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை கூட்ட வேண்டும் என்று ஆசிரியர்களை கேட்டு கொண்டார். பள்ளிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை பட்டியலிட்டு கொடுத்தால், செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி பொது மற்றும் மகபேறு மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து மருத்துவமனையில் வழங்கும் சிகிச்சை குறித்து விவரம் பெற்றார். புற நோயாளிகளை சந்தித்து, மருந்து மாத்திரைகள் வெளியில் வாங்க சொல்லி சீட்டு எழுதி கொடுக்கப்படுகிறதா என்று கேட்டு தெரிந்து கொண்டார்.