தினமலர் 31.08.2012
மாநகராட்சி மக்கள் புகார் செய்ய ஃபோன்
வேலூர்: வேலூர் மாநகராட்சி பகுதி பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க, கட்டணமில்லா டெலிஃபோன் வசதி செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாநகராட்சி பகுதி பொதுமக்கள், குறைகளை தெரிவிக்கும் வகையில், மாநகராட்சி அலுவலக வரவேற்பு பகுதியில், இலவச டெலிஃபோன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 18004254464 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். காலை 8 மணி முதல், இரவு 9 மணி வரை, பொதுமக்கள் இந்த ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டு, குறைகளை தெரிவிக்கலாம். நேற்று முதல் செயல்படும் இந்த கட்டணமில்லா டெலிஃபோனில், முதல் நாளில், 35 புகார்கள் வந்துள்ளது.””புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மேயர் கார்த்தியாயினி கூறினார்.