மாநகர் நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு நாளை குடிநீர் சப்ளை ரத்து
திருச்சி: மாநகரில் நீரேற்று நிலையத்தில் மின் பராமரிப்புக்காக நாளை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் தண்ட பாணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட் சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப் பணி நிலையம், பெரியார் நகர் நீர்சேகரிப்பு கிணற்று நீரேற்று நிலையம், அய்யாளம்மன் படித்துறை பொன் மலைக் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம், ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநர்த் திட்டநிலையம் ஆகிய இடங்க ளில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களுக்காக உள்ள கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (9ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது.
காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பணியால் கம்பரசம்பேட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மரக்கடை, விறகுபேட்டை, உறையூர், மலைக் கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகள்.
பெரியார் நகருடன் இணைக்கப்பட்டுள்ள தில்லைநகர், அண்ணாநகர், புத் தூர், காஜாப்பேட்டை, கன்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திரு மலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி.
பொன்மலையில் அடங் கும் அரியமங்கலம் பகுதி, மேலகல்கண்டார் கோட் டை, பொன்னேரிபுரம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைப்பட்டி, சிறைச்சாலை சுப்பிரமணியபுரம், விமானநிலையம் பகுதி, செம்பட்டு கல்லுக்குழி, காஜாநகர், காஜாமலை, கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டை மான் நகர், அன்புநகர்.
பிராட்டியூரில் இணைந்துள்ள ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், கே.கே. நகர், எல்ஐசி கலானி, விசுவநாதபுரம், கே.சாத்தனூர், தென் றல் நகர், விசுவாஸ் நகர், ஆனந்த் நகர், சுப்ரமணிய நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது. 10ம் தேதி வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும். இவ்வாறு கமிஷனர் தண்ட பாணி தெரிவித்துள்ளார்.