தினமலர் 22.04.2010
மின்பம்ப் மூலம் திருட்டு : வீட்டுகுடிநீர் சப்ளையில் பாதிப்பு
பழநி : பழநியில் மின்பம்ப் மூலம் குடிநீர் திருடுவதால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.பழநியில் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சப்ளை நேரத்தில் சில வீடுகளில் மின்பம்ப் மூலம் குடிநீர் திருடப்படுகிறது. இதனால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் வரும் அளவு குறைகிறது. சில வீடுகளில் முற்றிலும் குடிநீர் வருவதில்லை. குடிநீர் திருடும் வீடுகளில் மின்பம்ப்களை பறிமுதல் செய்து அனைத்து குழாய் இணைப்புகளுக்கும் முறையாக சப்ளை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘இது போன்ற புகார்கள் வந்துள்ளன. பழநியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடையாகும். எனவே அந்த நேரத் தில் குடிநீர் சப்ளை செய்கிறோம். மின்பம்ப் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. குடிநீர்திருட்டு குறித்து தெரிய வந்தால் மின்பம்ப்கள் பறிமுதல் செய்யப்படும்,’என்றார்.