தினத்தந்தி 16.08.2013
முகப்பேரில் வீடு கட்ட அனுமதி வாங்கிவிட்டு வணிக நோக்கத்திற்கு
பயன்படுத்தியதால் கட்டிடத்திற்கு சீல்வைப்பு சி.எம்.டி.ஏ. அதிரடி நடவடிக்கை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை பெருநகர் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை
கண்டறிந்து சி.எம்.டி.ஏ., நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி நடவடிக்கை
எடுத்து வருகிறது. சென்னை முகப்பேர் மேற்கு, பாரதி சாலையில், உயர்வகுப்பு
பிரிவினருக்கான மனை 295–ல் 2 வீடுகளுடன் தரைத்தளம் மற்றும் முதல்தளம்
கட்டுவதற்கு அந்த இடத்தின் உரிமையாளர் சென்னை மாநகராட்சியில் திட்ட அனுமதி
வாங்கினார்.
அதன்படி கட்டிடம் கட்டிவிட்டு, அதனை வணிக நோக்கத்தில் பயன்படுத்தினார்.
மேலும், கட்டிடமும் விதிமுறை மீறி கட்டப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீசு
அனுப்பப்பட்டது. அதன்பிறகும் அவர் கட்டிடத்தில் உரிய மாற்றங்கள்
செய்யவில்லை. அதனால் அந்த கட்டிடம் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.