தினமலர் 21.07.2010
முசிறியில் சிறப்பு துப்புரவு பணி முகாம்
முசிறி: முசிறியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நுகர்வோர் அமைப்பினர், முசிறி டவுன் பஞ்சாயத்து ஆகியவை சார்பில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது.முகாமை டவுன் பஞ்சாயத்து தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். மாணவர்கள் முசிறி புதிய பஸ் ஸ்டாண்டு, தா.பேட்டை ரோடு, அண்ணாநகர், பைபாஸ் ரோடு, துறையூர் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.செயல் அலுவலர் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, பள்ளி நுகர்வோர் குழுத் தலைவர் ராஜேந்திரன், என்.எஸ்.எஸ்., அலுவலர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.