தினபூமி 20.08.2013
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி தேர்வு: மேயர்
சென்னை, ஆக.20 – தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை
மாநகராட்சியில் முதன் முறையாக அகில இந்திய மற்றும் மாநில அளவிலான போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகின்றன.சென்னை
மாநகரில் படித்த பட்டதாரி இளைடர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி பல
துறைகளைச் சார்ந்த உயர்கல்வியையும் ((C.A., ICWA., விற்கான நுழைவு
தேர்வுகள் மற்றும் M.B.B.S., B.E., தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெறும்
அரசு/தனியார் ( IT நிறுவனங்கள்) போட்டித் தேர்வுகள்) மற்றும் அனைத்துப்
போட்டித் தேர்வுகள் (UPSC/TNPSC/TRB/TNUSRB) தேர்வுகள் மற்றும் அகில
இந்திய/மாநில அளவிலான பல வேலைவாய்ப்புகளுக்கான, உயர் கல்விக்கான போட்டித்
தேர்வுகள்) எழுதிடவும் அப்பகுதியில் பட்டம் பெற்ற இளைடர்கள் மற்றும்
மாணவர்களின் தேவைக்கேற்பவும், பள்ளிகளில் இட வசதிக்கேற்ப சென்னை
மாநகராட்சி, போட்டித் தேர்விற்கான பயிற்சியினை தனியார் நிறுவனங்களை சார்ந்த
சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு கட்டணமில்லாமல் பயிற்சிகள் வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் படித்து முடித்து விட்டு,
வேலை தேடும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும்
தங்களுடைய வீட்டின் அருகாமையிலுள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிற்சி
பெறலாம். இருபால் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் தனித் தனியாக வகுப்புகள் நடத்தப்படும். மேலும் படிப்பதற்கு
தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும் பயிற்சி பெறுகின்ற
மாணவ, மாணவியர்களுக்கு பாடக்குறிப்புகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் சென்னை
மாநகராட்சியின் இணையதளம் மூலம் பதிவு
கொள்ளலாம். www.chennaicorporation.gov.in. போட்டித் தேர்வுகளில் படிக்க,
வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து தங்கி படிக்க விரும்பும் மாணவ,
மாணவியர்களும் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவு செய்ய முடியாவதர்கள் தபால் மூலம்
தங்களது விண்ணப்பங்களை (மேயர் அலுவலகம், ரிப்பன் மாளிகை, சென்னை
மாநகராட்சி, சென்னை-3.) என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
சென்னை மாநகராட்சியில் 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான அடிப்படை
பயிற்சியும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் பங்குகொள்ள விரும்பும் மாணவ, மாணவியர்கள் 10.09.2013-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தகவலை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.