தினமலர் 10.08.2010
மெரீனாவில் சுகாதாரமற்றகுடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
சென்னை : மெரீனாவில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று, “தினமலர்‘ நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மெரீனாவில் ஆய்வு செய்தனர். அதில், மணலைத் தோண்டி நான்கு இடங்களில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.ஒன்று, இரண்டு லிட்டர் அளவுள்ள 600 குடிநீர் பாட்டில்களும், 25 குடிநீர் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.இத்தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.