தினமலர் 18.08.2010
மெரீனா கடைகளைமுறைப்படுத்த மேயரிடம் மனு
சென்னை : மெரீனாவில் உள்ள கடைகளை முறைப்படுத்த வேண்டுமென தமிழக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அமைப்பு சாரா மற்றும் கட்டுமானம் மற்றும் மீன்பிடி தொழிலாளர் பாதுகாப்பு பேரவையினர் மேயரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.இந்த அமைப்பின் தலைவர் முத்து, துணைத் தலைவர் சுந்தர மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் நேற்று மேயர் சுப்ரமணியனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், “மெரீனா கடற்கரையில் காமராஜர் சிலை முதல் நேதாஜி சிலை வரை மணற்பரப்பில் வைக்கப்படும் கடைகளை முறைப்படுத்த வேண்டும். அங்கு அமைக்கப்படும் கடைகளுக்கு வாடகை அல்லது வரி வசூலிக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தி உள்ளனர்.