தினமணி 18.06.2013
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு
கட்டமைப்பு வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்க
ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரமடை சாலை அபிராமி
திரையரங்கு முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணிக்கு நகர்மன்றத்
தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமாசெல்வி, நகராட்சி
ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர்
ஜெயராமன் வரவேற்றார்.
பேரணியை தொகுதி எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மகாஜன மேல்நிலைப் பள்ளி,
நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக், ஜிஎம்ஆர்சி நடுநிலைப் பள்ளி ஆகிய கல்வி
நிலையங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி,
முழக்கமிட்டபடி சென்றனர்.
கோவை சாலை, உதகை சாலை, சிறுமுகை சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில்
முடிவுற்றது பேரணி. இதில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்
பி.ஆர்.சுப்பையன், நகர கழக செயலர் வான்மதி சேட், நகர்மன்ற உறுப்பினர்கள்
வெள்ளிங்கிரி, மோகன்குமார், சூரியபிரகாஷ், விஜயகுமாரி, நகராட்சி உதவிப்
பொறியாளர் சண்முகவடிவு, நகரமைப்பு அலுவலர் சத்யா, துப்புரவு ஆய்வாளர்கள்
நல்லுசாமி, செந்தில்குமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.