தினமலர் 30.04.2010
ஊட்டி, மேட்டுப்பாளையம் பஸ்கள் கோவை புது பஸ்ஸ்டாண்டில் நிறுத்தம்:மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கோவை:’ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வெளியூர் பஸ் அனைத்தும், மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள புது பஸ்ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்கப்படும்‘ என்று, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்:இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ரோட்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் எதிரில், புதிதாக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பஸ்ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.அவ்வாறு திறந்தவுடன், மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் வெளியூர் பஸ் அனைத்தும், புது பஸ்ஸ்டாண்ட் வரை மட்டுமே இயக்கப்படும். இப் போது இருப்பது போல், காந்திபுரம் வரை இயக் கப்படாது. கூடலூர், ஊட்டி, குந்தா, குன்னூர், மஞ்சூர், மேட்டுப்பாளையம், கெத்தை, பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து வரும் பஸ்கள் அனைத்தும், மேட்டுப்பாளையம் ரோடு புது பஸ்ஸ்டாண்டிலேயே நிறுத்தப்படும்.மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து, காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டுக்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக, புதிதாக பஸ்கள் இயக்கப்படும்