தினமணி 19.04.2013
மேட்டூரில் பயோமெட்ரிக் பதிவு தொடக்கம்
சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் மக்கள் தொகை பதிவேட்டின்படி, தேசிய அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தப் பணியை, மேட்டூர் நகர்மன்ற ஆணையர் (பொறுப்பு) சுகுமார் முன்னிலையில் மேட்டூர் நகர்மன்றத் தலைவர் லலிதா சரவணன் தொடங்கி வைத்தார். நகராட்சியின் முதல் மற்றும் இரண்டாவது வார்டுகளில் உள்ளவர்கள் வைதீஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலும், 3,4-ஆவது வார்களில் உள்ளவர்கள் தங்கமாபுரிபட்டணம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 5 முதல் 9 வார்டு வரை உள்ளவர்கள் சேலம் கேம்ப் புனித பிலோமினா நடுநிலைப் பள்ளியிலும் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறுகிறது.