தினத்தந்தி 15.10.2013
மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் நடந்தது ஈரோடு மாநகராட்சி மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகராட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி
அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மல்லிகா
பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர்
மு.விஜயலட்சமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் மாநகராட்சியை மேம்படுத்துவது,
உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை திட்டம்
செயல்படுத்துவது ஆகியவை உள்பட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மண்டல தலைவர்கள் ஆர்.மனோகரன், பி.கேசவமூர்த்தி, காஞ்சனா
பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு
தலைவர் என்.சிவநேசன், நகர்ப்புற மேலாண்மை தனியார் நிறுவன உதவி மேலாளர்
விவேக் பிரவேஷ், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.