தினகரன் 15.06.2010
மைசூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் பட்டியல் வெளியீடு
மைசூர், ஜூன் 15: மைசூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்து மேயர் சந்தேஷ்சாமி பட்டியல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் புதிய நிலைக்குழு விரைவில் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தன்படி நிதி மற்றும் வரி நிலைக் குழுவின் உறுப்பினர்களாக வி.ஜெயராம், லட்சுமியம்மா, மகாதேம்மா, கே.ரவி, எம்.ராஜேஸ்வரி, சுகாதாரம் மற்றும் கல்வி நிலைக்குழு உறுப்பினர்களாக சிவண்ணா, பிரபுமூர்த்தி, ரத்னம்மா, ராம்பிரசாத், பரிதாபேகம், கமலா.
நகரவளர்ச்சி நிலைக்குழு உறுப்பினர்களாக டி.தேவராஜ், ஆர்.லிங்கப்பா, எம்.கே.சங்கர், சையத் அப்துல்லா, புஷ்பலதா, ஆஷா, புஷ்பா, அன்னையா மற்றும் தணிக்கை உறுப்பினர்களாக பி.சாந்தகுமாரி, மகாதேவம்மா, பி.தேவராஜ், ஆயுப்கான், சம்ஜத்பாஷா, முரளிதர் மற்றும் எம்.மகாதேவம்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.