தினமலர் 03.05.2010
மோகனூரில் ஆன்–லைன் வரி வசூல் துவக்கம்
மோகனூர்: மோகனூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆன்–லைன் மூலம் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.டவுன் பஞ்சாயத்து சேர்மன் கவுசல்யா துவக்கி வைத்து, வரி செலுத்தியவர்களுக்கு ரசீது வழங்கினார். நிகழ்ச்சியில், துணைத்தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம், முன்னாள் துணைத்தலைவர் அர்ஜுனன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.