தினமணி 09.08.2010
மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை
புதுக்கோட்டை, ஆக. 8: வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிóருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“”நகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை சிலர் உறிஞ்சி எடுப்பதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக நகரில் ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுத்தால், அது குற்றம். எனவே இந்தச் சட்ட விரோதச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மின் மோட்டாரும் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர்க் குழாய் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்படும்.”