தினகரன் 13.08.2010
மோட்டார் மூலம் உறிஞ்சுவதால் வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சின்னசேலம், ஆக. 13: மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதால் வடக்கநந்தல் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வடக்கநந்தல் பேரூராட்சியில் ஓடும் கோமுகி ஆற்றில் விவசாயத்துக்கு நீர் எடுப்பதால் ஆற்றில் நீர் வற்றியதுடன், நீர் மட்டமும் குறைந்து போனது. இதனால் வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மேட்டுப்பாளையம், வடக்கநந்தல் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி மூலம் குடிநீர் தேவை யான அளவுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்றவர்களும், பெறாத வர்களும் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்து இதர தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்ற னர்.
இதனால் பேரூராட்சி குடிநீர் தெரு குழாய்களில் குடிநீர் எடுப்பவர்களுக்கு சிறிது நேரமே வருகிறது. இதனால் பலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை.
இந்த நிலை சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் தொடர்கிறது. ஆகையால் குடிநீர் பஞ்சத்தை போக்க பொதுமக்களுக்கு ஓரளவு குடிநீர் கிடைத்திட, மாவட்ட ஆட்சியர் தனிப்படை அமைத்து மின் மோட்டார் பொருத்தி எடுப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மின் மோட்டாரையும் பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.