தினமலர் 21.022010
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு
தஞ்சாவூர் : யானைக்கால் நோய் தாக்குதலை தடுக்கும் மாத்திரைகளை வழங்க தன்னார்வ லர்களுக்கு ரெட்கிராஸ் அழைப்பு விடுத்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சுகா�ரத்துறை யினரால் வரும் 28ம்தேதி அன்று டிஇசி மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் தலைமையில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரப்பணி துணை இயக்குனர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள், பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களில் உள்ளோர் என அனைவரும் இப்பணியில் ஈடுபட்டு ஒத்துழைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் வேண்டுகோளை ஏற்று ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை தன்னார்வ தொண்டர்களை இப்பணியில் ஈடுபடுத்த உள்ளது.இதுகுறித்து ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் டாக்டர் வசந்தா கூறுகையில், இப்பணியில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை 43, மருத்துவக்கல்லூரி சாலை, மேம்பாலம் அருகில் உள்ள ரெட்கிராஸ் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.விருப்பம் உள்ளவர்கள் மற்றும் நேரில் வர இயலாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04362 272333 மற்றும் செல் 94427 29450. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி குறித்த பயிற்சியை வரும் 23ம்தேதி அன்று தஞ்சை நகராட்சி அலுவலகத்தில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.