தினமணி 09.03.2013
ராஜபாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராஜபாளையம் டி.பி. மில் சாலையில் ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ராஜபாளையம் நகர்ப் பகுதியில் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து பிரிந்து டி.பி. மில் சாலை வழியாகச் செல்கின்றன.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து நகராட்சி ஆணையர் சுல்தானா உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.