தினத்தந்தி 21.06.2013
ராணிப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நகரசபை தலைவர் தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டையில் நகரசபையின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை
தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரசபை துணை தலைவர்
ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை
தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகரசபை துணை தலைவர்
ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவிகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம்
குறித்தும், அதற்கான வழிமுறை குறித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியவாறும்
ஊர்வலமாக சென்றனர்.
நகரசபை வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகரசபை அலுவலகத்திலேயே முடிவடைந்தது.
ஊர்வலத்தில் நகரசபை உறுப்பினர்கள் கே.பி.சந்தோஷம், மணிமேகலை, கீதா,
சுகாதார அலுவலர் சரவணன், ஆய்வாளர் அப்துல் ரகீம், பள்ளி ஆசிரிய,
ஆசிரியைகள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.