தினமலர் 29.03.2010
ராமேஸ்வரம்–தனுஷ்கோடி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம்–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ,தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நெடுஞ்சாலை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஏராளமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோர்ட் உத்தரவை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி ஏப்.,ஐந்தில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் மேலத்தெரு, வர்த்தகன்தெரு, ரயில்வே பீடர் ரோடு,வேர்கோடு வழியாக ராமேஸ்வரம்ரோடு வரை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளால் அகற்றப்படும். இது தோடர்பாக நகராட்சி கமிஷனர் போஸ் நேற்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்துள்ளார். தண்டோர மூலமும் அறிவிக்கப்பட்டது.