தினகரன் 16.08.2010
ரிப்பன் மாளிகையில் மேயர் தேசிய கொடியேற்றினார்
சென்னை, ஆக.16: மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நேற்று சுதந்திர தினவிழா நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தேசிய மாணவர் படை, சாரண&சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 பேருக்கு தலா க்ஷீ 6 ஆயிரம் வீதம் 60 ஆயிரமும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், 10 பேருக்கு தலா க்ஷீ 20 ஆயிரம் வீதம் க்ஷீ 2 லட்சமும் மேயர் வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய உதவி வருவாய் அதிகாரி எம்.ஜான்மோசஸ், வரி மதிப்பீட்டாளர்கள் அய்யாகண்ணு, வினாயக மூர்த்தி, மருத்துவ அதிகாரிகள் மீனாட்சி அரவிந்த், பி.கே.நிர்மலா, மகப்பேறு உதவியாளர் வாழ்வரசி, செவிலியர் அனிதா, பல்நோக்க சுகாதார பணியாளர் மலர்க்கொடி, சாந்தகுமாரி, துப்புரவு பணியாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 பேருக்கு நற்சான்றிதழ்களை மேயர் வழங்கினார். பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, அதிகாரிகள் பங்கேற்றனர்.