தினமலர் 24.04.2010
ரோட்டில் திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது வழக்கு : கலெக்டர் எச்சரிக்கை
ராமநாதபுரம் : ”ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிதிரியும் கால்நடைகளின் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்படும்,” என ,கலெக்டர் ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டத் தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். பாரதிநகரில் ராமநாதபுரம் டவுன் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டின் இருபுறம் உள்ள மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பாம்பன் பாலத்தில் விளக்குகள் எரியவிடப்பட் டுள்ளன. வாகனங்களை 40 கி.மீ., வேகத்தில் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு போர்டு வைக்க வேண்டும். விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலைகளின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும். ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும் ,என்றார்.பிரதீப்குமார் எஸ்.பி., பாலசுப்பிரமணியம் டி. ஆர்.ஒ., வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், ஆர்.டி.ஒ.,க்கள் இளங்கோ, ஞானகண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்