தினமணி 10.12.2010
லஞ்சம்: நந்தம்பாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் இருவர் கைதுசென்னை, டிச. 9: சென்னை நந்தம்பாக்கத்தில் கட்டட அனுமதி வழங்க ரூ 6,000 லஞ்சம் வாங்கும்போது, பேரூராட்சி செயல் அலுவலரும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவர் நந்தம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் 2 மாடி கட்டடம் கட்ட அனுமதி கோரி நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினார்.
இவரது விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ், அனுமதி வழங்க ரூ6,000-ஐ லஞ்சமாக தர வேண்டும் என நிர்பந்தித்தாராம்.
இது குறித்து ஸ்ரீதர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôரிடம் புகார் அளித்தார். இதன்படி, ரூ6 ஆயிரத்துடன் தேவதாûஸ சந்திக்க ஸ்ரீதர் வியாழக்கிழமை காலையில் சென்றார். அப்போது தனது உதவியாளர் நவநீதத்தை பணம் வாங்குவதற்கு தேவதாஸ் அனுப்பினாராம்.
இதையடுத்து ஸ்ரீதரிடம் இருந்து ரூ 6 ஆயிரத்தை வாங்கும் போது நவநீதமும் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் செயல் அலுவலர் தேவதாஸýம் கைது செய்யப்பட்டனர்.