தினத்தந்தி 26.08.2013
வடவள்ளி, தெலுங்குபாளையத்தில் அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம்
கோவை மாநகராட்சி சார்பில் அம்மா திட்ட முகாம் வடவள்ளியில் நடந்தது.
முகாமுக்கு மேற்கு மண்டல தலைவர் சாவித்திரி பார்த்திபன் தலைமை தாங்கினார்.
மலரவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கோவை மாநகராட்சி மேயர்
செ.ம.வேலுச்சாமி பொதுமக்களுக்கு புதிய சொத்துவரி புத்தகத்தை வழங்கினார்.
3 நாட்கள் நடந்த இந்த முகாமில் சொத்துவரி புத்தகத்தில் பெயர் திருத்தம்,
பட்டா மாறுதல், குடும்ப அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சாதி
சான்றிதழ் போன்றவற்றை பயனாளிகள் உடனடியாக பெற்று சென்றனர். நிகழ்ச்சியில்
வன குழு தலைவர் பார்த்திபன், கவுன்சிலர்கள், நகரசெயலாளர் முருகேசன்,
அவைத்தலைவர் துரைராஜேந்திரன், பார்த்திபன், டி.பி.சேரலாதன் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
தெலுங்குபாளையம்
இதேபோல் தெலுங்குபாளையத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 21–வது வார்டு
76, 77, 78, 79, 86–வது வார்டு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு
தேவையான சொத்துவரி புத்தகத்தில் பெயர் திருத்தம், பட்டா மாறுதல், குடும்ப
அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ் போன்றவற்றை
பயனாளிகளுக்கு எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சியில் மலரவன் எம்.எல்.ஏ., ஆவின் சேர்மன் ப.வெ.தாமோதரன், மண்டல தலைவர் பெருமாள்சாமி, கவுன்சிலர்கள், உள்பட கலந்து கொண்டனர்.