வடுகப்பட்டியில் பன்றிகள் வளர்க்க தடை பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
வடுகப்பட்டியில் பன்றிகள் வளர்க்க தடை விதித்து பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள வடுகப் பட்டி பேரூராட்சி கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஈஸ்வரி முருகேசன் தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் சிவ னேஸ்வரி, செயல் அலுவலர் சு.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் விவரம் வருமாறு:
எம்.கணேசன்: பேரூராட்சி பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றது. இதனால் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சி பகுதியில் பன்றி கள் வளர்க்க தடை விதிக்க வேண்டும்.
செயல் அலுவலர்: பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப் படும்.
சந்திரசேகரன்: பேரூராட்சி பகுதியில் பண்டிகை காலங் களை தவிர மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும்.
மின் கட்டண வசூல் மையம்
துரைராஜ்: வடுகப் பட்டியில் மின்சார கட்டணம் வசூல் செய்வதற்கு என்று வசூல் மையம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போன்று போலீஸ் புறக்காவல் நிலைய மும் கொண்டுவர மாவட்ட போலீஸ் நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காமாட்சி: பேரூராட்சி பகுதியில் கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே குப்பைகள் கொட்டுவதற் கென்று தனி இடத்தை அமைத் துக் கொடுக்க வேண்டும்.
தலைவர்: இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சந்திரசேகரன்: வராகநதி யில் பொதுப்பணித்துறை கட்டிய தடுப்பணை இடிக்கப் பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் மணல் அள்ளுவதால் பாலம் மிகவும் சேதமடைந்து வருகிறது.
பெத்தணசாமி: வடுகப் பட்டி பஸ் நிறுத்தத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.
தலைவர்: தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.