தினமலர் 14.10.2010
வரிகள் செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை: கமிஷனர்திருவண்ணாமலை
: “வந்தவாசி நகராட்சியில் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என நகராட்சி கமிஷனர் உசேன்பரூக்மன்னர் தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வந்தவாசி நகராட்சியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம் சாலையை இணைக்கும் புதிய சாலை 2 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. 75 லட்ச ரூபாயில் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதே போன்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளதால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, குடிநீர், தொழில்வரி, நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை பாக்கிளை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக அளவில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்கள் பெயர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வெளியில் வைக்கப்படும். இதனை தவிர்க்க நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிளை உடனடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.