தினமலர் 06.03.2010
வரியை உடனே செலுத்த முசிறி அதிகாரி அழைப்பு
முசிறி: “முசிறி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி ஆகியவற்றை விரைவில் செலுத்த வேண்டும்‘ என டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முசிறி டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட ஒன்று முதல் 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் 2009-2010ம் ஆண்டுக்குரிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் மறு இணைப்பு ஆறு மாதத்திற்கு வழங்கப்படமாட்டாது. முசிறி டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்தி முறையாக ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.