தினமலர் 25.03.2010
வரி செலுத்தாதோருக்குகுடிநீர் இணைப்பு ‘கட்‘
கருமத்தம்பட்டி: மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் வரி செலுத் தாத 20 குழாய் இணைப்புகள் துண்டிக்கப் பட்டன.மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலர், பணியாளர்கள் தனித் தனி குழுவாக நேரடியாகச் சென்று வரி வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:அனைத்துப் பகுதிகளிலும் நிலுவையில் உள்ள வரியினங்கள் தீவிர வரி வசூல் முகாமில் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான வரி நிலுவையில் உள்ள வீடுகளில் பலமுறை தொடர்ந்து அறிவுறுத்தியும் வரி செலுத்தாமல் உள்ளனர். இவற்றில் 20 இடங்களில் குழாய் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன. வரி பாக்கிக்கு ஜப்தி நடவடிக்கையிலும் பேரூராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக முறையற்ற விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு வரி விதிப்பு செய்யாமல் உள்ளது. இது குறித்தும் ஆய்வு நடத்தி, வரி விதிப்பு செய்யப்படும்.இவ்வாறு செயல் அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்தார்.