தினமலர் 12.03.2010
வரி செலுத்த காலக்கெடு
சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவற்றை இம்மாதம் 15 க்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் காலக் கெடு நிர்ணயித்துள்ளது. சின்னமனூர் நகராட்சி கமிஷனர் பக்கிரிசாமி கூறுகையில், “நகராட்சியில் வரி வசூல் அதிகளவு நிலுவையில் உள்ளது. இதனால் சொத்துவரி, தொழில்வரி, குத்தகையினங்கள், கடைவாடகை மற்றும் குடிநீர் வரி என வரி செலுத்தாதவர்கள் தங்கள் நிலுவை தொகைகளை இம்மாதம் 15க்குள் செலுத்திட வேண்டும். செலுத்தாவிட்டால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண் டிக்கப்படும்‘ என்றார்.