தினமலர் 08.02.2010
வரி செலுத்த வேண்டுகோள்
திருப்பூர் : “திருப்பூர், 15 வேலம் பாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை, பிப்., 15க்குள் செலுத்த வேண்டும்‘ என நகராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் தெரிவித் துள்ளார்
.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர், 15 வேலம் பாளையம் நகராட்சியில் 2009-10ம் ஆண்டுக்கான வரி வசூல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கு இரண்டு முறை சொத்து மற்றும் தொழில் வரிகளும், ஆண்டுக்கு நான்கு முறை குடிநீர் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. மார்ச் மாதத் துக்குள் செலுத்த வேண்டிய வரியினங்களுக்கு, கால அவகாசமாக பிப்., 15ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதற்குள் வரியினங் களை செலுத்த வேண்டும்.
நகராட்சியில் உள்ள ஒன்று முதல் 21 வார்டு மக்களுக்கும், இது பொருந் தும். குறிப்பிட்ட நாட் களுக்கு வரியினங்களை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்துள்ளார்.