தினமலர் 01.04.2010
வரி வசூலிப்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை! விழுப்புரம் நகராட்சி சேர்மன் உறுதி
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக் கப்படும் என சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.
விழுப்புரம் நகர் மன் றக் கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நேற்று காலை நடந்தது. கமிஷ னர் சிவக்குமார், மேலா ளர் லட்சுமி நாராயணன், பொறியாளர் பார்த் திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
கவுன்சிலர் பாபு: மயான கட்டடம் அருகே கழிப்பிடம் சுகாதாரமின்றி உள்ளதை சீரமைக்க வேண்டும்.
கணேஷ்சக்திவேல்: நவீன மயானத்திட்டத் திற்கு நகராட்சி செலவு என்ன?. குறைந்த செலவில் கட்டக் கூடிய நிதியை வீணடித்துள்ளீர்கள்.
செங்குட்டுவன்: பாதாள சாக்கடைப் பைப்புகள் உடைந்து தரமற்ற வேலை செய்யப்படுகிறது. 30 கோடி நிதி திட் டத்தினை கண்காணிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.
சேர்மன்: நகராட்சி மூலம் 56 லட்சம் ரூபாய் செலவில் மெயின் கட்டடங்களும், இதில் 36 லட் சம் செலவில் எரிவாயு உபகரணங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. இத் திட் டத்தை தமிழகத்தில் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செய் கின்றனர். இதில் கணக் குப் பார்த்து குழப்ப வேண் டாம். பாதாள சாக்கடைத் திட்டம் குடிநீர் வாரியத்தினர் செய்கின்றனர். அங்கு நமது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரகுபதி: நகராட்சி சமுதாயக்கூட கட்டடங்களில் உபகரணங்கள் மாற்றுவதாக செலவினங்கள் தொடர்கிறது. இதற்கு பதிலாக டெண்டர் வைத்து செய்ய வேண்டும். குடிநீருக்கு 200 திருட்டு கனெக் ஷன்கள் உள்ளது. ஓட் டல்களில் வரி கட்டாமல் தண்ணீர் பிடிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேர்மன்: ஒரு சில கவுன்சிலர்களே வரி பாக்கி வைத்துள்ளனர். திருட்டு கனெக்ஷன் எடுப் போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரி செலுத்தாதவர்கள் மீது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் அக்கரையின்றி உள்ளனர். தவறு செய்யும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். நகரில் உள்ள ஏழை குடிசைவாசிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வரி ரத்து செய்யப் படும். இவர்களுக்காக 2.75 கோடி ரூபாய் நகராட்சி சார்பில் செலவினங்கள் ஏற்கப்படும்.
பஞ்சநாதன்: ஓட்டல்களில் சுகாதாரமற்ற நிலை உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கலைவாணன்: விழுப்புரத்தில் பிளாஸ்டிக் பொருள் உபயோகத்தால் சுகாதார சீர்கேடு உள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.
செல்வராஜ்: பென்னாகரம் இடைத் தேர்தல் தி. மு.க., வெற்றிக்கு முதல் வர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
விவாதத்தில் குறுக் கிட்ட மல்லிகா உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கட்சி பாராட்டுக் களை வெளியே வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் பிரச்னை பற்றி இங்கு பேசுங்கள் என்றனர்.
மேலும் அ.தி.மு.க. ஆதரவில் வெற்றி பெற்ற நீங்கள் எங்களை கண் டித்து பேச தகுதியில்லை. முதலில் ஒரு கட்சியில் நிலையாக இருங்கள் என அ.தி.மு.க., வினர் கடுமையாக விமர்சித்தனர்.
ஆவேசமடைந்த செல் வராஜ், எனக்கு ம.தி. மு.க., பிடிக்கவில்லை. அதனால் தி.மு.க., விற்கு வந்தேன் என்று விளக்கமளித்தார். இதனால் கூட் டத்தில் பரபரப்பு ஏற் பட்டது.சேர்மன் தலையிட்டு, நல்லது செய்ததால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் நாமும் நல்லது செய்து மக்களிடம் நற்பெயர் எடுக்க வேண் டும் என கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார்.