தினமலர் 03.08.2010
வரி வசூலில் சதமடித்தது வீரகேரளம்
பேரூர்:வீரகேரளத்தில், 17 ஆண்டுகளுக்கு பின் நூறு சதவீதம் வரி வசூலாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல், வீரகேரளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்வரி, உரிமக்கட்டணம் வசூலிக்கப்பட்டன. தண்ணீர் வரி நீங்கலாக நிலுவையின்றி ஒரு கோடி ரூபாய் வசூலானது. கடந்த 17 ஆண்டுகளுக்கு பின், நூறு சதவீதம் வசூலாகியுள்ளது. இச்சாதனையை பாராட்டி, பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவின் பேரில் கலெக்டர் உமாநாத், பேரூராட்சி தலைவர் பக்தவச்சலம், செயல் அலுவலர் துரைமணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.