தினமலர் 30.06.2010
வரைபட புள்ளிவிபர அறிக்கை தயாரிப்பு
திருப்பூர்: வரும் 2011ல் மாநகராட்சி விரிவடைவதற்கேற்ப, வார்டு பிரிப்பது தொடர் பான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. அதற் காக, ஊராட்சிகளில் வரைபடத்துடன் கூடிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.திருப்பூர் மாநகராட்சியுடன் எட்டு ஊராட்சிகளை இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. அதற்காக, ஊராட்சிகளின் மொத்த வார்டுகள், சர்வே எண், ரோடு, குளம், குட் டைகள் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட விபரங்களை கொண்டு, ஊராட்சி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்புவதற்காக, வரைபடம் அடங்கிய “சிடி‘க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னையில், மாநகராட்சி அமைப்பு தனி அலுவலர் பிச்சை தலைமையில் அதற் கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது.மாநகராட்சியுடன் இணைய உள்ள நகராட்சி செயல் அலுவலர்கள் மற் றும் ஊராட்சி உதவியாளர் கள் பங்கேற்கின்றனர்.அக்கூட்டத்தில் பங்கேற்க கொண்டு செல்வதற்காக, வரைபடத்துடன் கூடிய புள்ளிவிபர பட்டியல் தயாரிப்பு பணி நேற்று துரிதகதியில் நடந்தது.