தினமணி 24.09.2009
வறட்சி: ஆழ்குழாய் கிணறு அமைக்கும்பணி தொடக்கம்
விருதுநகர், செப். 23: விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தில் கூடுதலாக ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
வறட்சியையொட்டி, இங்கு குமாரலிங்கபுரம், தாதம்பட்டியில் சிறப்பு நிதி மூலம் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் அப் பகுயிலில் கிணறுகளில் நீர் வற்றக்கூடும் எனச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால், சில தினங்களுக்கு முன்பு தொடங்கவிருந்த பணி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆட்சியரின் யோசனைப்படி, முதலில் குமாரலிங்கபுரத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அடுத்து தாதம்பட்டியில் கிணறு தோண்டப்படும். தற்போது பிரச்னை ஏதுமில்லை என்றார் விருதுநகர் நகராட்சி ஆணையர் கல்யாணசுந்தரம்.
குமாரலிங்கபுரத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைக்க இடையூறு ஏதுமில்லை என்று ஊராட்சித் தலைவர் முருகன் கூறினார்.