தினமணி 08.03.2010
வளாக நேர்காணல்: வி.பி.எம்.எம். மாணவிகளுக்கு நியமன ஆணை சுகாதார மேம்பாட்டுப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்
சிவகாசி, மார்ச் 7: சிவகாசி நகராட்சியில் சுகாதார மேம்பாட்டுப் பணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபட உள்ளதாக நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நகராட்சியில் தற்போது நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கச் செல்லும் போது, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து பொதுமக்கள் வழங்குவதில்லை.
முன் மாதிரியாக 15,26,30,32,33 ஆகிய வார்டுகளில், நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன், அப்பகுதி மகளிர் சுயஉதவிக் குழுவினர் வீடு வீடாகச் சென்று குப்பைகளைப் பெற்று, அதனை ஒரே இடத்தில் கொட்டி, பிளாஸ்டிக் பொருள்கள், இரும்பு மற்றும் கண்ணாடி உள்ளிட்டவைகளைத் தனியே பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
அப்படி பிரிக்கும் போது கிடைக்கும் பொருள்களை விற்றுக் குழுவினர் அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.