தினகரன் 30.06.2010
வள்ளியூரில் உழவர் சந்தைக்கு இடம் தேர்வு
வள்ளியூரில் உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.அருகில் வள்ளியூர் டவுன்.பஞ்.தலைவர் சங்கரநாராயணன்.
வள்ளியூர், ஜூன் 30: நெல்லை மாவட்டத்தில் கே.டி.சி நகர் மற்றும் வள்ளியூரில் உழவர் சந்தை அமைக்க தமிழக அரசு அனுமதியளித்துள் ளது. இதனை தொடர்ந்து வள்ளியூரில் காந்திநகரில் உள்ள மீன் சந்தை அருகில் உள்ள பேரூராட்சிக்கு சொந் தமான இடத்தில் உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை நேற்று மாவட்ட வருவாய் அலுவ லர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார். அப்போது வள் ளியூர் பேரூராட்சி தலைவர் சங்கரநாரயணன், இங்கு பேரூராட்சிக்கு சொந்தமாக மொத்தம் ஒரு ஏக்கர் 70 சென்ட் இடம் உள்ளது. இதில் தற்போது சிறுவர் பூங்கா அமைக்க 10 சென்ட் இடமும், பேரூராட்சி சார் பாக திருமணமண்டபம் அமைக்க 60 சென்ட் இட மும் போக மீதி உள்ள ஒரு ஏக்கரில் உழவர் சந்தை அமைக்க ஒதுக்கப்படும். இந்த இடம் பஸ் நிலையத்திற்கு அருகிலும் ஊரின் மையப்பகுதியில் இருப்பதாலும் பொதுமக்களுக்கும், உழவர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்றார். இதையடுத்து இந்த இடத்தை உழவர் சந்தை அமைக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக அவர் தெரிவித் தார்.
ஆய்வின்போது ராதா புரம் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகம், வள்ளியூர் நிர்வாக அலுவலர் முத்துகுமார், வட்டார தலைமை நில சர்வேயர் தயாநிதி, சர்வேயர் நடரா ஜன், வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் மோகன், கிராம் அலுவலர் ராஜேந்திரன் உட்பட வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.