தினமலர் 04.05.2010
வள்ளியூரில் திருவள்ளுவர் கலையரங்கம் திறப்பு விழா
வள்ளியூர்:வள்ளியூரில் 12.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கலையரங்கை நான்குநேரி எம்.எல்.ஏ.வசந்தகுமார் திறந்து வைத்தார்.வள்ளியூர் டவுன் பஞ்., 18வது வார்டில் நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.20 லட்ச ரூபாயும், டவுன் பஞ்.,பொது நிதியிலிருந்து 3 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆக மொத்தம் 12.20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.இதன் திறப்பு விழாவிற்கு டவுன் பஞ்., தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகநயினார் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் பூவையா வரவேற்றார். புதிய திருவள்ளுவர் கலையரங்கை நான்குநேரி எம்.எல்.ஏ.வசந்தகுமார் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட காங்., தலைவர் மோகன்குமாரராஜா, வர்த்தக காங்., மாவட்ட தலைவர் சந்திரசேகர், நல்லாசிரியர் செல்லப்பா, டவுன் பஞ்., கவுன்சிலர்கள் லாரன்ஸ், கண்ணன், ராஜ்குமார், சேதுராமலிங்கம், பனிபாஸ்கர், குமாரசாமி, அமிர்தகனி, கீதா, தேவகலா, பொன்ஜெஸிபாய், நகர காங்., தலைவர்கள் குமாரசாமி, முத்துராஜ், வட்டார காங்., தலைவர் சுயம்புலிங்கதுரை, இந்திய கம்யூ.,நகர செயலாளர் மலையாண்டி, மாநில பேச்சாளர் வெள்ளப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.