தினமலர் 03.05.2010
வள்ளியூர் டவுன் பஞ்.,சில் இன்று கலையரங்கம் திறப்பு விழா
வள்ளியூர்:வள்ளியூர் டவுன் பஞ்.,சில் நான்குநேரி எம்.எல்.ஏ.வசந்தகுமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கலையரங்கம் திறப்பு விழா இன்று (3ம் தேதி) நடக்கிறது.வள்ளியூர் டவுன் பஞ்.,சில் திருவள்ளுவர் கலையரங்கம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனை இடித்துவிட்டு புது கலையரங்கம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில் புதிய கலையரங்கம் கட்ட நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.20 லட்ச ரூபாயும், டவுன் பஞ்., பொது நிதியிலிருந்து 3 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் 12.20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை நடந்து முடிந்தது. இதன் திறப்பு விழா இன்று (3ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது.திறப்பு விழாவிற்கு டவுன் பஞ்., தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் ஆறுமுகநயினார் முன்னிலை வகிக்கிறார். செயல் அலுவலர் முத்துகுமார் வரவேற்கிறார். புதிய திருவள்ளுவர் கலையரங்கத்தை நான்குநேரி எம்.எல்.ஏ. வசந்தகுமார் திறந்து வைத்து பேசுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை லக்ஷமன்–சுருதி இன்னிசை கச்சேரி நடக்கிறது.