தினமணி 04.08.2010
வள்ளியூர் பேரூராட்சியில் மனுநீதி நாள் முகாம்
வள்ளியூர்
, ஆக. 3: வள்ளியூர் பேரூராட்சியில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் வழியாக தீர்வு காணப்படும் என்று பேரூராட்சித் தலைவர் ஆர்.சங்கரநாராயணன் தெரிவித்தார்.வள்ளியூர் பேரூராட்சியில் மனுநீதிநாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது
. பேரூராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலான ஆதரவற்ற முதியவர்கள் தங்களுக்கு உபகாரச் சம்பளம் கேட்டு மனுக்கள் அளித்தனர்.இதனைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சித் தலைவர் இம் மனுக்களை ராதாபுரம் வட்டாட்சியரிடம் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
.