தமிழ் முரசு 01.08.2013
வாலாஜாபாத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம்
பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாலாஜாபாத்
பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி
தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தம்மாள் முன்னிலை
வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, மற்றும் வார்டு
கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசின் திட்டப்பணிகள்
பற்றி விவாதித்தனர்.
கவுன்சிலர்கள் பேசுகையில், தெரு விளக்குகள்
அமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை
சீரமைக்க வேண்டும், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
புதிய கட்டுமானப்பணி நடக்கும் வீடுகளில் அனுமதி பெற்று இருக்கிறார்களா?
என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதில்
பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட சேர்க்காடு பகுதி, எஸ்.பி.கோயில் தெருவில்
கழிவுநீர் கால்வாய் அமைப்பது, வல்லப்பாக்கம் பகுதியில் புதிய குடிநீர்
பைப்லைன் அமைப்பது, தாசப்ப சுபேதா தெருவில் விடுபட்டுள்ள சிமென்ட் சாலையை
அமைப்பது, வி.வி.கோயில் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு மின்சார
இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.