தினமலர் 10.03.2010
விக்கிரவாண்டி பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சியில் இன்று நடைபெறவிருந்த ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் பஸ் நிலையத் தில் புதிய வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு இன்று(10ம் தேதி) ஏலம் விடப்போவதாக பேரூராட்சி மன்ற நிர்வாகம் அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக புதிய அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டிருந்ததால் ஏலத்திற்கு சால்வன்சி (சொத்துமதிப்பு ) சான்று எடுக்க முடியவில்லை. எனவே ஏல தேதியை ஒத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்று வணிக வளாகத்திற்கான ஏலம் வரும் 19 ம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி செயல்அலுவலர் பால்பொன்னையா அறிவித்துள்ளார்.