தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
விண்ணப்பித்த ஒரு வாரத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வீடு தேடி வரும்!
பிறப்பு, இறப்புச் சான்று கோருபவர்கள்,
விண்ணப்பத்துடன் ரூ.5-க்கான ஸ்டாம்புடன், சரியான விலாசத்தை கொடுத்து
விட்டுச் சென்றால் ஒரு வார காலத்துக்குள் சான்றுகள் தபால் மூலம்
வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் அமுதா
சிவப்பிரகாசம் கூறினார்.
குடியாத்தம் நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றுகள் கோரி விண்ணப்பிப்போரிடம்
கட்டாயப்படுத்தி பணம் கேட்பதாக நகர்மன்ற உறுப்பினர்கள் புகார்
தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்து அமுதா பேசுகையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட
ஊழியர்களை அழைத்து எச்சரிக்கைப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி
நடைபெறாது. சான்று கோரி விண்ணப்பிப்போரிடம் யாராவது பணம் கேட்டாலோ, இடைத்
தரகர்கள் தொந்தரவு இருந்தாலோ புகார் தெரிவிக்கலாம்.
பிறப்பு, இறப்புச சான்று கோருபவர்கள், விண்ணப்பத்துடன் ரூ. 5 க்கான
ஸ்டாம்புடன், சரியான விலாசத்தை கொடுத்து விட்டுச் சென்றால் ஒரு வார
காலத்திற்குள் சான்றுகள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்
என்றார்.
நகரில் உரிய அனுமதியின்றி வீடுகள் கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ள புகார்
தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமுதா கூறினார்.”காவிரி கூட்டுக்
குடிநீர்த் திட்டத்துக்காக, பள்ளிகொண்டாவிலிருந்து வரும் பைப்லைன்,
பொன்னம்பட்டி அருகிலிருந்து, சந்தப்பேட்டை வரை கௌன்டன்யா ஆற்றில்
புதைக்கப்பட உள்ளது. இதற்காக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர
வேண்டி பொதுப்பணித்துறைக்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்’
என நகர்மன்ற உறுப்பினர் ஜி.எஸ். அரசு கோரிக்கை விடுத்தார்.
“புதிய பஸ் நிலையத்திலிருந்து, நெல்லூர்பேட்டை காந்தி சவுக் வரை
போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. மாணவர்கள், பெண்கள் நலன்கருதி
அச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு ஏற்றார்போல்
சாலையை மேம்படுத்த வேண்டும்’ என உறுப்பினர் எஸ். உதயகுமார் கோரிக்கை
விடுத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், ஆணையர் (பொறுப்பு)
ஜி. உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் எஸ். ராஜரத்தினம் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.