தினமணி 12.03.2010
விதிகளை மீறி உயரமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை
மதுரை, மார்ச் 11: பாதுகாப்பு கருதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி விதிமுறை மீறி உயரமாகக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 1994}ம் ஆண்டுக்கு முன்னர் உரிய ஒப்புதல் பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே அந்தக் கட்டடங்களை இடிக்க முடியாது.
பாதுகாப்பு தொடர்பாக விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க போலீஸ் சார்பில் எவ்வித நோட்டீஸýம் மாநகராட்சிக்கு வழங்கப்படவில்லை.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு உயரமாக கட்டடங்கள் கட்டக் கூடாது என்று அரசு உத்தரவிட்ட பின்னரும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.