தினமணி 26.06.2013
தினமணி 26.06.2013
விதிமீறல்: முகப்பேரில் அடுக்குமாடி கட்டடத்துக்கு சீல்
முகப்பேர் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 3
மாடிக் கட்டடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ)
அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெளியிட்ட செய்தி:
மனை எண் பி-28, சி-24, கம்பர் தெரு, முகப்பேர் மேற்கு என்ற முகவரியில்
ஆயத்த ஆடைத் தொழில் நடத்துவதற்காக, தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட
கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் திட்ட அனுமதிக்கு முரணாக, அதன் உரிமையாளர் 3-ஆவது தளத்தைக் கட்டி,
வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் கட்டடத்தை
மாற்றியமைக்குமாறு சி.எம்.டி.ஏ தரப்பிலிருந்து அதன் உரிமையாளருக்கு
அறிவிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் அறிவிக்கை கிடைத்த பின்னரும், கட்டடத்தை
மாற்றியமைக்காமல் விதிமுறைக்கு புறம்பாக வணிகப் பயன்பாட்டுக்காகவே
உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அக்கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.