விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’ : மாநகராட்சி அதிரடி
கோவை, டிச. 29:
கோவையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பிரபல வணிக வளாகத்துக்கு அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது. 164 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் பிரபல வணிக வளாகம் உள்ளது. 22 கடைகள் செயல்பட்டு வந்தன. சில மாதங்களுக்கு முன் விதிமுறை மீறல், பார்க்கிங் வசதி இல்லாததால் அங்கு செயல்பட இருந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இன்று வணிக வளாகத்தில் இருந்த 20 கடைகளை உள்ளூர் திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சியினர் இணைந்து சீல் வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, உள்ளூர் திட்ட குழும இணை இயக்குநர் மூக்கையா தலைமையில், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு செயல்பட்டு வந்த மீன் விற்பனை நிலையம், மளிகை கடை, ஆரோக்கிய பொருள் விற்பனையகம் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டன.
அங்கு ஒரு வங்கி வாட கைக்கு செயல்பட்டு வந்தது. வங்கிப்பணி முடங்க கூடாது என்பதற்காக ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டது. விரைவில் வங்கியும் மூடப்படும். இதேபோல் 3 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த கிளப் ஹவுசும் மூடப்பட்டது. சீல் வைக்க கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும், போலீஸ் பாதுகாப்புடன் வளாகம் மூடப்பட்டது. கடைகள் திறக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் கூறியதாவது:
இங்குள்ள வளாகம் 15 ஏக்கரில் உள்ளது. தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் இங்கே வசிக்கின்றனர். 164 பங்களா வீடுகள் அமைந்துள்ளன. 2003ம் ஆண்டு வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு கட்ட நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது. ஆனால் அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டப்பட்டது. மாநகராட்சி வடிகால் மீது ஒரு கட்டிடம் மற்றும் செப்டிங் டேங்க் கட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிட அமைப்பு மாறியிருக்கிறது. பிளானில் உள்ளபடி கட்டுமானம் அமையவில்லை. 164 கட்டிடமும் முழு அள வில் விதிமுறை மீறலில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள் ளது. ஒரு மாதம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பில்டிங் பிளானில் உள்ள படி கட்டிடத்தை இடித்து கட்டவேண்டும். இல்லாவிட்டால் உள்ளூர் திட்ட குழுமம், மாநகராட்சி சார்பில் கட்டிடம் இடிக்கப்படும்.
வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர். ‘சீல்’
வைக்கப்பட்ட வணிக வளாகம். உள்படம்: வணிக வளாகத்துக்கு ‘சீல்’
வைக்கப்படுகிறது.