விதிமுறை மீறி கட்டினால் மட்டுமே நடவடிக்கை பழைய கட்டிடங்களுக்கு பிரச்னை எதுவும் இல்லை
திருச்சி, : ஸ்ரீரங்கத்தில் வணிக நோக்கத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். பழைய கட்டடங்கள் மீது நடவடிக்கை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மாநகராட் சிக்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அனுமதியின்றி கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு திருச்சி மாநகராட்சி சட்டப்பிரிவுகள் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் விதிக் கப்பட்டது.
இதைப் பொருட்ப்படுத்தாமல், தொடர்ந்து விதி களை மீறி கட்டிடப்பணி கள் மேற்கொள்ளப்பட்ட தால், மாநகராட்சி சட்டப் படி வேலை நிறுத்த அறிவிப்பும் வழங்கப்பட்டது. அதன்பின்பும் பணியினை தொடர்ந்ததால் உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட் டது. வணிக நோக்குடன் இது போன்ற அனுமதி இல்லாத விதிமீறலுடன் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கு மட்டும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்க னவே உள்ள பழைய கட்டிங்களுக்கு இந்த நடவடிக்கை கள் ஏதும் பொருந்தாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.