தினமணி 15.02.2014
விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்
தினமணி 15.02.2014
விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்
கொட்டிவாக்கத்தில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, எண்:1-30 என்ற
முகவரியில் தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம்
கட்டப்பட்டுள்ளது. அந்தக் கட்டடம் வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதியின்றி
பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது குறித்து அந்தக் கட்டடத்தின் உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பரில்
நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் கட்டடம் திருத்தியமைக்கப்படாததால்
வியாழக்கிழமை அக்கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டது என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.